அந்த கிராமத்து பிஞ்சு மனசுக்குள் லட்சம் கனவுகள் சிறகு விரிக்கத் துவங்கிய இடம் புத்தகங்கள் தான். பள்ளிப் புத்தகத்தில் தரிசித்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் அவனுக்கு விண்ணில் பறக்கும் வேகத்தை அளித்தது. ஏன் பறவை பறக்கிறது...எப்படி விமானம் காற்று கிழித்து வானத்தில் மிதக்கிறது...இந்த பிரபஞ்சக் கோல்கள் ஆடும் கண்ணாமூச்சியை என்னால் அருகில் சென்று பார்க்க முடியுமா. ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த குழந்தை வானத்தைப் பார்த்து இப்படியெல்லாம் யோசித்தது. ஆம் அந்த சிறுவன் வளர்ந்து பட்டப்படிப்பையும் முடித்து விட்டு இன்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது கண்டுபிடிப்புகளால் வியப்பை பரிசளித்து விட்டு ஆய்வுகளைத் தொடர்கிறான்.குறுங்கோள்களில் துவங்கிய ஆராய்ச்சி வானத்தை மட்டும் வட்டமிடவில்லை. மண்ணையும் அந்த சிறுவன் விட்டு ைவக்கவில்லை. இந்த மண்ணில் காற்றில் கலக்கும் மாசுவில் இருந்து இயற்கையில் நுரையீரலை விடுவிக்கவும் ஆய்வுகளைத் தொடர்கிறான். கார்பன்டை ஆக்சைடு காற்று மண்டலத்தை சூறையாடும் வேகத்தைக் குறைக்கவும், விடுதலை அளிக்கவும். நம் பூமியின் வெப்பம் குறைந்து, நம் நதிகளின் இதயம் நெகிழ்ந்து, நம் பூக்களில் வெட்க மகரந்தம் குழைத்து....வண்ணத்துப் பூச்சிகள் மீண்டும் வசந்த வாசல் திறக்க இவரைப் போன்ற நம்பிக்கை மனிதர்களை மூளை தூக்கம் மறந்து துடிக்கிறது.
ஆம் அந்த அயராத மூளைக்கும் அசத்தும் ஆய்வுகளுக்கும் சொந்தக்காரர் நம் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வளர்ந்து வரும் விஞ்ஞானி சத்தியவேல். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத முகம். ஆய்வுக்கெனவே அர்ப்பணிக்கப்பட்ட மனம், தேடல் மிகுந்த கண்கள் என நம்பிக்கையின் ஒளி மிகுந்த மனிதராய் வளர்ந்து நிற்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மாடுசெட்டி அள்ளி குக்கிராமத்தை சேர்ந்த விவசாய தம்பதி சின்னத்தம்பி- விஜயா. இவர்களின் மகன் சத்தியவேல்(29). ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாரிசெட்டி ஊராட்சி பள்ளியிலும், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புவரை வேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியிலும், பிளஸ் 1வகுப்பை தர்மபுரி பரம்வீர் பள்ளியிலும், பிளஸ்2வை நாவரசம்பட்டி அரசு பள்ளியிலும் முடித்தவர் சத்தியவேல். தர்மபுரி ெஜயம் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றுள்ளார். மேலும் திருநெல்வேலி பிஎஸ்என் பொறியியல் கல்லூரியில் விண்வெளி துறை சார்ந்த முதுகலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். பட்டம் ெபற்றுவிட்டோம், நல்ல வேலை கிடைத்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று நினைக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் நாட்டை பற்றி சிந்தித்துள்ளார் சத்தியவேல். உலகை அழிக்க ஆயத்தமாகி வரும் குறுங்கோள்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும், மண்ணின் வளத்தை சிதைக்கும் மாசுக்களை ஒழிக்கவும் அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி, இஸ்ேரா விஞ்ஞானிகளின் பாராட்டுகளை ெபற்றுள்ளார் பெருமைக்குரிய இந்த விவசாயி மகன்.
இந்த ெபருமைக்கு அடித்தளம் அமைத்தது எது? மனம் திறக்கிறார் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் சத்தியவேல். நான் படித்த ஜெயம் கல்லூரியில் நுழைவு வாசல் முன்பு ராக்கெட் மாடல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதை தினமும் பார்த்து விட்டு தான், வகுப்புக்கு செல்வேன். அதை பார்க்கும் போதெல்லாம் நாமும் இது போன்று ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்குள் வந்து போகும். நாம் படிக்கும் படிப்பு, நம்மோடு இந்த நாட்டையும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை சிறுவனாக இருக்கும் போதே எனக்குள் இருந்ததும் ஒரு காரணம். இப்படிப்பட்ட நிலையில் குறுங்ேகாள்கள் பூமியின் மீது விழும் அபாயம் உள்ளது. அவை பூமியின் மீது விழுந்தால் ஒரு பெரியநாடு அழியும் என்று விஞ்ஞானிகள் எழுதிய ஆய்வுக் கட்டுரையை படித்தேன். குறுங்கோளின் சுற்றுவட்ட பாதையானது செவ்வாய் கோளுக்கும், ஜூபிடர் கோளுக்கும் இடையில் உள்ளது. இதன் எடையானது 7,959 கிலோ முதல் 19லட்சத்து 89 ஆயிரத்து 675 கிலோ வரை இருக்கும். இதில் சிறிய எடை கொண்ட குறுங்கோளால் எந்த ஆபத்தும் பூமிக்கு இல்லை. ஆனால் அதிக எடையுள்ள குறுங்கோள் அதிக ஆபத்தையும், பெருத்த அபாயத்தையும் பூமிக்கு ஏற்படுத்தும்.இந்த குறுங்கோள் சுற்றுவட்ட பாதை அருகே வரும் போது, அதை எவ்வாறு தடுத்து வேறொரு பாதைக்கு மாற்றுவது தான் எனது ஆராய்ச்சி. சுற்றுவட்டப் பாதையில் செயற்ைக கோள் சுற்றுவது போல் ஒரு ரோபோவை உருவாக்கி உள்ளேன்.
அதில் ஏடி89552 என்ற மைக்ரோ கண்ட்ரோல் பயன்படுத்தப்பட்டு, அதில் புரோகிராம் ேலாடு செய்துள்ளேன். குறுங்கோள் பூமியை நோக்கி வருவது போல் ஒரு மாடல் உருவாக்கி, அதை டிரான்ஸ்மிட்டர் மூலமாக பாதையை மாற்றும் படி வடிவமைத்துள்ளேன். இதற்கு ரோபோட்டில் பொருத்தப்பட்டிருக்கும் மெக்கானிசம் மிக உதவியாக இருக்கும். இதனால் பூமியை அழிவில் இருந்து பாதுகாக்கலாம்.தற்போது 2 கோணங்களில் இதன் வொர்க்கிங் மாடலை வடிவமைத்துள்ளேன். 3 கோணங்களில் வொர்க்கிங் மாடல் வடிவமைக்க அதிகம் செலவாகும் என்பதால் ஆராய்ச்சியை நிறுத்தி வைத்துள்ளேன்.தற்போது சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் கார்பன்டை ஆக்ஸைடு வாயுவை கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சியை துவக்கி உள்ளேன். இதில் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்கும். இந்த வெற்றியில் கிடைக்கும் வருமானத்தில் குறுங்கோள்களை கட்டுப்படுத்துவதற்கான மூன்றாம் கோண ஒர்க்கிங் மாடலை உருவாக்குவேன். இப்படி உறுதியுடன் நிறைவு செய்கிறார் சத்தியவேல்.
Applications are invited only through online mode for direct recruitment to the posts in Combined Technical Services Examination (Non - Interview Posts). Date of Notification: 21.05.2025 Date of commencement of receiving application: 27.05.2025 Last date and time for submission of online application: 25.06.2025 Application Correction Window period: 29.06.2025 12:01 AM to 01.07.2025 11:59 PM ***Exam Date: August 4 - 10*** Click here to download the Notification: TNPSC - CTS - Non Interview Posts: Adv No 711: Notification No: 09/2025 Date 21.05.2025 Addendum to TNPSC - CTS-Non Interview Posts: Notification No: 9A/2025 Date: 11.06.2025
Comments